"என் செல்ஃபோனை ஒட்டு கேட்கிறார்கள்" பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு.. நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைப்பு!
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளியிட்டுள்ள வீடியோவில் பிரதமர் மோடி தனது செல்ஃபோனை ஒட்டுக்கேட்பதாகவும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பிரதமரை மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் பிரதமர் தனது செல்ஃபோனை கண்காணிப்பதாக குற்றம் சாட்டினார். அத்துடன், "உங்கள் இடம், உங்கள் மேடை -ஆனாலும் விவாதம் செய்ய உங்களுக்கு ஸ்கிரிப்ட் தேவை. பதட்டமாக…