புத்தாண்டுக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமா? டிரம்ப் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், அதில் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், புத்தாண்டுக்குப் பிறகும் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தத் தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும்…